முகப்புகோலிவுட்

ஜோதிகாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்தது

  | April 22, 2019 17:32 IST
Jyothika

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்குகிறார்
  • இது ஒரு நகைச்சுவை பொழுதுபோக்குத் திரைப்படம்
  • யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மெண்டில் பெயரிடப்படாத படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தினை பிரபு தேவாவை வைத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண்  இயக்குகிறார்.

ஜோதிகா ரேவதி இருவரும் இணைந்து நடித்து கலக்கும் நகைச்சுவை பொழுது போக்குத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. இந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் சூர்யா கலந்து கொண்டுள்ளார். 

 

cst10cs8இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு 35 நாட்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது

.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்