முகப்புகோலிவுட்

ஜோதிகாவின் ‘ராட்சசி’ படம் பற்றி பிரபலங்களின் கருத்து!

  | July 05, 2019 12:43 IST
Jyothika Raatchasi

துனுக்குகள்

  • கௌதம் ராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌதம் ராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்  ‘ராட்சஷி'. ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். இன்று வெளியாகும் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது.
 
csrojp2g

 
இந்த சிறப்புக்காட்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்தனர். நடிகர் விவேக் கூறும் போது, ‘அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இப்படம் காணிக்கையாக இருக்கும். இன்றைக்கு உள்ள சூழலில் இந்த படம் தேவையானது. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் மக்களுக்கு இது போன்ற படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தமிழக அரசின் விருதும், இந்திய அரசின் விருதும் இந்த படத்திற்கு கிடைக்க வேண்டும் என்றார்”
 
l4huqsro

 
நடிகர் ஹரிஸ் கல்யாண் பேசும் போது, ‘படத்தில் இருந்த அனைத்து கதாபாத்திரங்களும் தேவையானவர்களாகவே இருந்தார்கள். எந்த கதாபாத்திரமும் திணிக்கப்பட்டவர்கள் போல் இல்லை. ஜோதிகா மேம் சிறப்பாக நடித்திருக்கிறார். இது போன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும்” என்று கூறினார்.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்