முகப்புகோலிவுட்

கார்த்தியின் அக்காவாக நடிக்கும் ஜோதிகா…?

  | April 23, 2019 21:12 IST
Karthi

துனுக்குகள்

  • ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார்
  • இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார்
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நடிப்பதில் அதிக கவனமாக இருக்கிறார் என்பதை அவருடைய முந்தைய படங்களை பார்க்கும் போது தெரிந்துக்கொள்ள முடிகிறது.

தற்போது பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகாவின், தம்பியாக கார்த்தியும் அப்பாவாக சத்யராஜும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை, ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகை ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், காமெடியனாக சதீஷ் நடிக்கிறார்
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்