முகப்புகோலிவுட்

சூர்யா பிறந்தநாளில் ஜோதிகாவுக்கு பரிசு! ட்விட்டரை தெறிக்கவிடும் 'ஜாக்பாட்'

  | July 23, 2019 12:37 IST
Jyothika

துனுக்குகள்

  • கல்யாண் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஜோதிகா,ரேவதி இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர் இப்படத்தில்
  • வரும் ஆகஸ்ட் 2ல் இப்படம் வெளியாக இருக்கிறது
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜோதிகா, ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் களம் இறங்கி இருக்கும் படம் ‘ஜாக்பாட்'. அதிரடியான ஆக்ஷன் காமெடி நிறைந்த இப்படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணியளவில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சூர்யா.
 
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2ல் இப்படம் வெளியாக இருக்கிறது.
 
காவல்துறை அதிகாரிகளாக வரும் ஜோதிகா மற்றும் ரேவதியின் அதிரடியான சண்டை காட்சிகளும், உடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகானின் அட்டாகாசமான காமெடி காட்சிகளும் இந்த டிரெய்லரில் இடம் பெற்று தற்போது இணையத்தை தெறிக்கவிட்டிருக்கிறது.
 
விஷால் சந்திரசேகரின் இசையில் ஜோதிகா, ரேவதியின் சாகசங்கள் அதிரடியாக மிரட்டுகிறது. சூர்யாவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் டிரெய்லரை அவர் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்