முகப்புகோலிவுட்

“தப்பு பண்ணாதான் பயப்படனும்” - ஜோதிகா நடிக்கும் “ராட்சசி” ட்ரெய்லர்

  | June 01, 2019 16:18 IST
Jyothika

துனுக்குகள்

  • கௌதம் ராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது
  • ஜோதிகா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “ராட்சசி”. இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா இந்த படத்திலும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அரசு பள்ளி ஒன்றின் ஆசிரியராக நடிக்கும் ஜோதிகா, அலச்சியமாக இயக்கும் அந்த பள்ளியை வலுவாக கட்டமைக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அங்கு அவர் எதிர்கொள்கிற பிரச்னைகள் விறுவிறுப்பாக நகர்கிறது ட்ரெய்லர்.
 

 
அரசு பள்ளியில் படிப்பவர்கள் உயர்கல்வியில் 50சதவீதம் ஒடஒதுக்கீடு கொடுத்தால்  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் நலம் பெறுவார்கள் ஆனால் அரசு யாருடைய வறுமையை ஒழிக்கிறது என்ற தெரியவில்லை என்கிற வசனங்கள் இந்த ட்ரெய்லரில் கவனம் பெறுகிறது.

சியான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி, தனிக்கொடி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்