முகப்புகோலிவுட்

தமிழ்ராக்கர்ஸில் வெளியான ‘ராட்சசி’; அதிர்ச்சியில் படக்குழு!

  | July 06, 2019 12:41 IST
Raatchasi

துனுக்குகள்

  • கௌதம் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • ஜோதிகா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அறிமுக இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நேற்று நாடு முழுவதும் வெளியான படம் ‘ராட்சசி'. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
 
அரசு பள்ளியின் அவலங்களை பேசும் திரைக்கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரையுலகிற்கு சவாலாக இருந்து வரும் தமிழ்ராக்கர்ஸ் இந்த படத்தையும் படம் வெளியான அன்றே வெளியிட்டிருக்கிறது. இது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச்செய்திருக்கிறது.
 
pods1uvg

தொடர்ந்து வெளியாகும் புதுப்படங்களை தமிழ்ராக்கர்ஸ் திரையிடப்படும் அன்றே தனது வலைதளத்தில் வெளியிட்டு திரையுலகிற்கு சவாலாக இருக்கிறார்கள். தமிழ்ராக்கர்ஸை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைள் எடுத்தும் அவர்களை ஒழிக்க முடியவில்லை என்பதே திரையுலக பிரபலங்களின் வேதனையாக இருக்கிறது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்