முகப்புகோலிவுட்

என்னை மீட்டெடுத்தவர் கே.பாலசந்தர்- கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி!

  | July 11, 2019 11:44 IST
Vairamuthu

துனுக்குகள்

  • கே.பாலசந்தரின் பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது
  • டிசம்பர் 23,2014ம் ஆண்டு பாலசந்தர் மறைந்தார்
  • கலைமாமணி, பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றவர் பாலசந்தர்
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வைரமுத்து, சுகாசினி, ரகுமான், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் என பலர் கலந்துக்கொண்டு பாலசந்தரோடு இருந்த நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.
 
விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது,
 
‘ஒரு இசை அமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணி யாற்றினேன். ஒரு கட்டத்தில் அந்த இசை அமைப்பாளருடன் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது . என்ன செய்வது என்றே  தெறியாமல் சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் மிகப்பெரியது.
 
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை. அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர். பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை.
 
மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட். அந்த திலீப்தான் ஏ ஆர் ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா, மீட்டெடுத்தவர் பாலச்சந்தர். புன்னகை மன்னன் படத்தில், என்ன சத்தம் இந்த நேரம், பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு, என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில்நுட்ப மேதை அவர்.
 
பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும்' என்றார். இந்த நிகழ்வை கே.பாலசந்தரின் உதவியாளர் மோகன் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்