முகப்புகோலிவுட்

பாக்கியராஜ் இயக்கத்தில் சசிகுமார்.! ரீமேக் ஆகும் ‘முந்தானை முடிச்சு’

  | May 20, 2020 17:00 IST
Munthanai Mudichu

கே. பாக்கியராஜ் எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்து 1983-ல் வெளியான திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’.

மூத்த இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் தானே எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்து 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முந்தானை முடிச்சு'. இதில், பாக்கியராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். மேலும் இப்படத்தை ஏ.வி.எம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

அச்சமயத்தில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 25 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் திரைப்படமாகவும், பாக்கியராஜின் எப்போதும் பேசக்கூடிய கிளாசிக் படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும், இப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ள நிலையிலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் கொண்டுள்ள ‘முந்தானை முடிச்சு', தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை, மீண்டும் பாக்கியராஜ் இயக்க, கதாநாயகனாக அவருக்கு பதிலாக இயக்குநர்-நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தயாரிக்கவுள்ள JSB Film Studios-ன் JSB சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்து சசிகுமார் மற்றும் பாக்கியராஜின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com