முகப்புகோலிவுட்

“மனிதத்தின் தேவை அன்பு” பா. ரஞ்சித் பாராட்டிய ‘சில்லுக் கருப்பட்டி’..!

  | December 27, 2019 19:38 IST
Sillu Karuppatti

துனுக்குகள்

 • சில்லுக் கருப்பட்டி திரைப்படத்தை ஹலிதா சமீம் இயக்கியுள்ளார்
 • இப்படத்தை 2D எண்டர்டைன்மெண்ட் சூர்யா வெளியிட்டுள்ளார்
 • இப்படம் CIFF-ல் 2-வது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
இன்று திரைக்கு வந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

சூர்யாவின் 2D Entertainment வழங்கும் ‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஹலிதா சமீம் எழுதி இயக்கியுள்ளார். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு மேயாத மான் படத்துக்கு இசையமைத்த பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான 2-வது பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குனர் பா. ரஞ்சித், இப்படக்குழுவினருக்கு மகிழ்ச்சியோடு பாராட்டுக்களை அள்ளித் தெளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு !!! திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது இந்த சில்லுக்கருப்பட்டி, சுவைக்க தந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com