முகப்புகோலிவுட்

யுவன் இசையில் இரண்டாம் பாடலை வெளியிட்ட “நேர்கொண்ட பார்வை” படக்குழு

  | July 09, 2019 19:19 IST
Kaalam

துனுக்குகள்

  • நேர்கொண்ட பார்வை படம் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்
  • இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்
  • வித்யா பாலன் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்
போனிகபூர் தயாரிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கி இருக்கும் “நேர்கொண்ட பார்வை” படத்தின் இரண்டாவது பாடலான ‘காலம்' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
கடந்த ஆண்டு அமிதாப் பச்சன், டாப்சி இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்தான் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “நேர்கொண்ட பார்வை”.
 
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒவ்வொரு அறிவிப்பின் போது அஜித் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார். நேர் கொண்ட பார்வை படத்தின் வானில் இருள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகி இருக்கும் காலம் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

நேற்று விஜய் நடிக்கும் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலை விஜய் பாடி இருக்கிறார் என்று படக்குழு அறிவித்தது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்பாது அஜித் ரசிகர்களுக்கு நேர்கொண்ட பார்வை படக்குழு இரண்டாம் டிராட்கை வெளியிட்டு குஷி படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்