முகப்புகோலிவுட்

'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர்! வெளியான புகைப்படங்கள்!

  | October 08, 2019 13:06 IST
Surya

துனுக்குகள்

  • சுதா கொங்காரா இயக்கும் சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
  • காப்பான் திரைப்படம் 'பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளாக அறிவிப்பு
  • சூரரை போற்று படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருகிறது
என்.ஜி.கே படத்தை அடுத்து சூர்யா கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொருளாதார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரதமர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க அவரின் பாதுகாவலராக நடித்திருந்தார். இதில் விவசாயிகளின் பிரச்னைகளையும் இத்திரைப்படம் பேசியிருந்தது. இதனால் விவசாயிகளிடம் இப்படம் பாராட்டுகளையும் பெற்றது. நல்ல வரவேற்பை பெற்றதும் இந்தப் படத்தை 'பிளாக் பஸ்டர்' வெற்றி என படக்குழுவினர் கேக் வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் இது குறித்த புகைப்படங்களை இயக்குனர் கே.வி. ஆனந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலையதளங்களில் வைரலாகி வருகிறது.
  இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெர்ஃப், ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த சூர்யா படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கி இருந்தார். விரைவில் இப்படம் திரைக்கு கொண்டு வருதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்