முகப்புகோலிவுட்

தமிழை இனி யார் 'காப்பான்'  -  காவல் ஆய்வாளரை அதிர்ச்சியடைய வைத்த சூர்யா ரசிகர்கள்! 

  | September 24, 2019 13:39 IST
Kaappaan

துனுக்குகள்

  • கடந்த வாரம் இப்படம் வெளியானது
  • மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்திருக்கிறார்
  • புவனகிரியில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காப்பான்' திரைப்படம் கடந்த வாரம் நாடு முழுவம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. லைகா நிறுவனம் தாயரித்திருக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்க இவர்களுடன் ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான நாள் முதலே சூர்யா ரசிகள் இப்படத்தை வித்தியாச வித்தியாசமாக  கொண்டாடி வருகிறார்கள்.  இந்நிலையில் புவனகிரியில் சூர்யா ரசிகர்கள் சிலர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றுள்ளனர். இதனையடுத்து, புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் இவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என கடிதம் எழுதி கொடுக்கச் சொல்லி உள்ளார். அதன்படி கடிதம் எழுதிய 6 மாணவர்களும் தப்பு தப்பாக தமிழை எழுதி உள்ளனர். அதனை ஆய்வாளர் தனது முகநூலிலும் பதிவிட்டு "இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும் ..." என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்