முகப்புகோலிவுட்

Kaappaan: சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்பு! காப்பான் படத்திற்கு காத்திருக்கும் ஆச்சர்யங்கள்!

  | September 16, 2019 12:31 IST
Kaapan

Kaappaan படம் வெளியாகின்ற அன்று 200 ஹெல்ட்டுகள் வழங்கப்படும்

துனுக்குகள்

 • வரும் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது
 • இப்படத்தில் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்
 • ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்
kaappaan Suriya; நடிகர்  சூர்யா(Suriya)  தன்னால் இயன்ற வரை ஏழை எளிய மக்களின் கல்வி நலனுக்காக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்கிற உயர்ந்த என்னத்தில் ‘அகரம்' என்கிற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கிக்கொண்டிருக்கிறார். கல்வி குறித்த சூர்யாவின் பார்வை சமீப காலங்களில் பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
 
இது மட்டும் இல்லாமல் தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு சில உதவிகளையும்  செய்து வருகிறார். இவை அனைத்தும் கேமிராவிற்கு பின் நின்று அவர் செய்யும் பணிகள். இவரைப்போலவே இவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஆச்சர்யமான விஷயங்களை செய்து வருகிறார்கள்.
 
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சூர்யா ரசிகர்கள், அந்த பகுதி மக்களின் கல்விக்கு ரசிகர் மன்றம் சார்பாக உதவி வருகிறார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெரும் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகையை சேகரித்து கொடுக்கிறார், ஏழை எளிய மக்களுக்கு உணவு, இரத்த தானம் என இவர்களின் பணி நீண்டுக்கொண்டிருக்கிறது. தற்போது வருகின்ற 20ம் தேதி சூர்யா நடிப்பில் காப்பான் படம் வெளியாக இருக்கிறது. முன்பு வெளியான ‘என்.ஜி.கே' படத்தின் போது மிக உயர்ந்த பேனர் வைத்து படத்தை கொண்டாடினர். சமீபத்தில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற மாணவி விபத்தில் இறந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து அனுமதி இன்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிகை எடுக்கப்படும் என நீதி மன்றமும் அதிகாகிளும் இப்போதுதான் இது தொடர்பான கவனத்தை கூடுதலாக்கி இருக்கிறார்கள். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ‘காப்பான்' திரைப்படம் வெளியாகின்ற அன்று வானுயர்ந்த பேனர்கள் வைப்பதை விட பாதுகாப்பு கவசமான ஹெல்மெட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர் அப்பகுதி சூர்யா ரசிகர்கள்.
 
சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகும் போது பேனர், கட்அவுட்க்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் உபயோகமாக இருக்கும் என நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கோரிக்கையை வைத்திருந்தார். இதை ஏற்ற சூர்யா ரசிகர்கள் காப்பான் படம் வெளியாகின்ற அன்று 200 ஹெல்ட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com