முகப்புகோலிவுட்

காப்பான் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட லைகா நிறுனம்!

  | July 17, 2019 13:35 IST
Kaappaan

துனுக்குகள்

  • காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30ல் வெளியாக இருக்கிறது
  • சிறப்பு வேடத்தில் மோகன்லால் இந்த படத்தில் நடித்துள்ளார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது
லைகா விறுவனத்தின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த்  இயக்கும் படம் காப்பான். சூர்யா சாயிஷா, மோகன்லால், ஆர்யா உள்ட்டோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு தேதியை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா பாதுகாப்பு படை வீரராக நடிக்கும் படம் ‘காப்பான்'. இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்க அவருடைய பாதுகாவலராக சூர்யா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுலை 21 நடக்கும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வரும் ஆகஸ்ட் 30 வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்