முகப்புகோலிவுட்

உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தடைகளை உடைத்து நாளை வெளியாகிறது “காப்பான்”!

  | September 19, 2019 17:21 IST
Kaappaan

துனுக்குகள்

 • குறிப்பிட்டது போலவே நாளை காப்பான் வெளியாகிறது
 • காப்பான் படம் வெளியாக தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
 • காப்பான் கதை திருட்டு வாக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்
kaappaan; கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,(Suriya) ஆர்யா,(Arya) மோகன்லால் சாயிஷா,இன்னும் பல பிரபலங்கள் நடித்திருக்கும் படம் “காப்பான்”. இப்படம் ஆகஸ்ட் 30 வெளியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 20ம் தேதி இதன் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
பிரதமராக இருக்கும் மோகன்லாலை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா இப்படத்தில் நடித்தள்ளார். படத் திரையிடப்பட இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என  சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்படத்திறக்கு எதிராக ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லைஎன வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீடு செய்தார்.
 
இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த மேல் முறையீடு காரணமாக இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கை விசாதித்த நீதிபதிகள் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நாளை வெளியாக இருந்த காப்பான் திரைப்படம் வெளியிட தடையில்லை என உத்தரவு பிரப்பித்தனர்.
 இந்த தீர்ப்பால் படக்குழுவினர் மற்றும் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com