முகப்புகோலிவுட்

விஷாலுக்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்!!!

  | August 05, 2019 20:54 IST
Vishal

துனுக்குகள்

  • அயோக்யா படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் புதிய படம் இது
  • சுந்தர் சி இரண்டாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம் இது
  • இந்த படத்தில் கபீர் துஹான் சிங் தீவிரவாதியாக நடித்து வருகிறார்
விஷால் நடித்து வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் கபீர் துஹான் சிங்.
அயோக்யா படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு துருக்கி, உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக ஹைதராபாத், மற்றும் வட இந்தியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு தயாராகி வருகிறது.
 
இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் விஷாலுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இவர் தீவிரவாதியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக நிஜ தீவிரவாதிகளின் பேட்டிகளையும், தீவிரவாதிகளை மையப்படுத்திய படங்களையும் பார்த்து பயிற்சி எடுத்துள்ளதாக தெரிகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகும் இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பை முடித்து போஸ்ட் புரெடக்ஷ்ன் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது படக்குழு.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்