லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 64' என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினியின் ‘பேட்ட' படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மாலவிகா மோஹணன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ் மற்றும் ‘96' திரைப்படத்தில் நடித்த கௌரி ஜி கிஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் சாட்டிலைட் உறிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கைதி' திரைப்படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அடிக்கடி லீக்காகும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையே வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள், இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடிவருகின்றனர்.
Team #Thalapathy64 welcomes the super Talented @iam_arjundas on board!#ArjunDasJoinsThalapathy64pic.twitter.com/VTQdxboQpW
— XB Film Creators (@XBFilmCreators) November 30, 2019