முகப்புகோலிவுட்

மேடம் டுஸாட்ஸ்-ல் மெழுகு சிலையான முதல் தென்னிந்திய நடிகை..! மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்..!

  | February 05, 2020 14:34 IST
Kajal Agarwal

மேடம் டுஸாட்ஸில் சிலை வைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை. என்ற பெருமையை காஜல் அகர்வால் பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேடம் டுஸாட்ஸில் சிலை வைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை. என்ற பெருமையை காஜல் அகர்வால் பெற்றுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமான காஜல் அகர்வால், கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் சிறந்த நடிகையாக புகழ் பெற்றார். அவர் விஜய், அஜித், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவர் தற்போது கமல் ஹாசனுடன் ‘இந்தியன் 2', ‘பாரிஸ் பாரிஸ்' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை காஜல் குடும்பத்துடன் தனது மெழுகு சிலையை திறந்துவைத்துள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன. முன்னதாக 2019 டிசம்பரில், காஜல் அகர்வால் இதை தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோரும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்