முகப்புகோலிவுட்

‘இந்தியன் 2'-ல் காஜல் அகர்வாலின் வயது என்ன? காஜல் அகர்வாலின் அதிரடி பதில்!

  | November 08, 2019 16:41 IST
Indian 2

துனுக்குகள்

  • இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார்
  • இந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
  • இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து முடிந்தது
இந்தியன் 2 படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ள காஜல் அகர்வால்.
 
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது சங்கர் தீவிரமாக இயக்கி வருகிறார். இந்தியன் படத்தைப் போலவே இந்த படத்தில்லும் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் தாதா வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆந்திர மாநிலத்தில் எடுத்து முடித்து தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த படத்தில் பவாணி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்தில், காஜல் அகர்வால், 85 வயது பெண்ணாக நடிக்கிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து காஜல் கூறுகையில், 'இந்தியன் 2' படத்தில், தற்காப்பு கலைகள் தெரிந்த, அதிரடி பெண்ணாக தான் நடித்து வருவதாகவும். அதற்காக, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்று வருவதாகவும் கூறினார். மேலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் வயது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்