முகப்புகோலிவுட்

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் ! மாப்பிள்ளை எப்படி இருக்கனும் தெரியுமா

  | October 30, 2019 12:30 IST
Kajal Agaarwal

துனுக்குகள்

 • பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது
 • இந்தியன் 2 படத்தில் வயாதான பாட்டி கதாபாக்திரத்தில் நடித்து வருகிறார் இவர்
 • தற்போ காஜலுக்கு 34 வயது ஆகிறது.
காஜல் அகர்வால் 2008ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நாயகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்த இவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தற்போது தேரவு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலும் உறுதிப்படுத்தி உள்ளார். 

தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர், "நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரை மணப்பேன்" என்று கூறியுள்ளார்.  தற்போது "பாரிஸ் பாரிஸ்", " இந்தியன்2" உள்ளிட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com