முகப்புகோலிவுட்

ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணையும் “கோமாளி”

  | May 03, 2019 09:03 IST
Jayam Ravi

துனுக்குகள்

 • இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்
 • ஹிப்பாப் தமிழா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
 • காஜல் அகர்வால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்
அடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார், இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க ஹிப்பாப் தமிழா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
 
‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் குறித்த விவரங்களை ஜெயம் ரவி தனிது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.  மேலும் இதில் இணையும் நடிகர், நடிகைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவலை காஜல் உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வருகிறார்கள். 
 
7knl49f8

 
காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2” படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com