முகப்புகோலிவுட்

வெங்கட் பிரபுவுடன் இணைந்த காஜல் அகர்வால்?

  | September 11, 2019 15:17 IST
Venkat Prabhu

துனுக்குகள்

  • வெங்கட் பிரபு தயாரிப்பில் தயாராகி உள்ள படம் ஆர்.கே.நகர்
  • தற்போது வெங்கட் பிரபு வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார்
  • இதில் காஜல் அகர்வால் இணைந்துள்ளார்
வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் காஜல் அகர்வால், வைபவ் இணைந்துள்ளனர்.
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘கோமாளி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கமலுக்கு ஜோடியாக சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதில் வைபவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் இயக்க இருந்த மாநாடு படத்திலிருந்து சிம்பு விலகியதால் அப்படம் கிடப்பில் உள்ளது. இதனால் தற்போது இணைய தொடரை இயக்க வெங்கட் பிரபு தயாராகியுள்ளார். வெங்கட் பிரபு தயாரிப்பில் வெளியாக இருந்த ‘ஆர்.கே.நகர்' திரைப்படம் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிரகு இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஆர்.கே.நகர் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்