முகப்புகோலிவுட்

உதயநிதி படத்திலிருந்து மீண்டும் விலகிய காஜல்.?

  | April 28, 2020 19:05 IST
Udhayanidhi Stalin

முன்னதாக, உதயநிதி மற்றும் சந்தானம் நடித்த 'நண்பேன்டா' படத்தில் காஜல் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் வெளிநடப்பு செய்யவே, அவருக்கு பதிலாக நயன்தாரா நியமிக்கப்பட்டார்.

காஜல் அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தனது பதவியை வகித்து வருகிறார். அவர் அடுத்ததாக சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் பெண்ணை மையமாக கொண்டு எடுக்கப்படும் ‘பாரிஸ் பாரிஸ் ' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ஒரு புதிய படத்திலிருந்து காஜல் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அப்படத்துக்காக முன்பணத்தைப் பெற்று, பிறகு திருப்பி கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், படைப்பு வேறுபாடுகளை சுட்டிக்காட்டி நடிகை த்ரிஷா சிரஞ்சீவியில் ‘ஆச்சார்யா' படத்திலிருந்து வெளிநடப்பு செய்தபின், காஜல் அப்படத்தில் விரும்பி இணைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சிரஞீவிக்கு ஜோடியாகும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காகத் தான் உதயநிதியின் படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, உதயநிதி மற்றும் சந்தானம் நடித்த 'நண்பேன்டா' படத்தில் காஜல் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் வெளிநடப்பு செய்யவே, அவருக்கு பதிலாக நயன்தாரா நியமிக்கப்பட்டார். அதையடுத்து காஜல் அகர்வாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் உதயநிதி புகார் அளித்ததாகவும், அப்பட்த்துக்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உதயநிதியின் எந்தவொரு புதிய படத்திற்கும் காஜலை அணுகப்படவில்லை என்றும், தற்போது வெளிவரும் செய்திகள் வெறும் ஊகங்கள் என்றும் காஜலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்து வருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com