முகப்புகோலிவுட்

காஜல் அகர்வாலின் படத்துக்கு பல இடங்களில் கத்திரி போட்ட சென்சார் குழு!

  | August 07, 2019 17:10 IST
Paris Paris Movie

துனுக்குகள்

  • தமிழில் பாரிஸ் பாரிஸ் என்கிற தலைப்பில் உருவாகி இருக்கிறது குயின் படம்
  • தணிக்கை குழு 25 இடங்களை வெட்டியுள்ளது இப்படத்தில்
  • படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ்
கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றுதந்த படம்  ‘குயின்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தென்இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியாக இருக்கிறது. இதில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்க ‘பாரிஸ் பாரிஸ்' என்கிற தலைபில் இப்படம் உருவாகி இருக்கிறது. மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிக்க ‘ஜம் ஜம்' என்ற பெயரிலும், தெலுங்கில் தமன்னா நடிக்க ‘தட் இஸ் மகாலெட்சுமி'எனவும், பருல் யாதவ்வை கன்னடத்திலும்  ‘பட்டர்பிளை'என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.
 
இந்த நான்கு மொழிகளிலும் வெளியாக இருக்கும் படங்களை  மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ‘பாரிஸ் பாரிஸ்' படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை மங்க செய்துள்ளனர்.
 
சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். மொத்தமாக 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழில் இப்படம் வெளியாக சற்று காலதாமதம் ஏற்பட வாய்பிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்