முகப்புகோலிவுட்

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகை!

  | May 25, 2019 13:34 IST
Jayam Ravi

துனுக்குகள்

  • இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்
  • ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்
  • காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார்.
ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிவரும் இப்படத்தின் டைட்டிலை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு.
 
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 18-ம் தேதி வெளியானது. இதையடுத்து இரண்டாவது போஸ்டர் மே 19 வெளியானது. 3-வது போஸ்டரை நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி  மே 20-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் 4-வது போஸ்டரை விஜய்சேதுபதியும், 5-வது போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டார்கள். 

கோமாளி 6-வது போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். இப்படத்தின் போஸ்டர்களை பிரபலங்கள் வரிசையாக வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கோமாளி படத்தின் 7-வது போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். விறுவிறுபபாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இவர் கமல் நடிக்கும் ‘இந்தியன்2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்