தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளிவர தயாராகி இருக்கிறது. இந்தியில் வெளியானி வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதனை அடுத்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் இவர். இந்நிலையில் சென்னை வந்த காஜல் பேட்டி ஒன்றில் பேசும் போது,
“இந்தியாவிலும் சூப்பர் ஹீரோ படங்கள் வரும். அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. ‘பாரிஸ் பாரிஸ்' திரைப்படம் வெளியாக தயாராகி இருக்கிறது. என்னுடை சினிமா வாழ்கையில் எனக்கு திருப்தி அளித்த படம் ‘பாரிஸ் பாரிஸ்'. தொடர்ந்த இது போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.
இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேச ஆசை தான். ஆனால் ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளார். ஆனால் என்னுடையது கதாபாத்திரமாக ஆச்சர்யமான இருக்கும். நவம்பரில் என் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக களரிச்சண்டையும் குதிரையேற்றமும் கற்று வருகிறேன்.