முகப்புகோலிவுட்

புதிய வலைத் தொடரில் நடிக்கும் காஜல் அகர்வால்..?

  | July 29, 2020 00:56 IST
Kajal Aggarwal

கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் காணப்பட்ட காஜல், தற்போது, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹே சினாமிகா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா' திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார். அடுத்தபடியாக ‘இயக்குநர் இமயம்' பாரதிராஜா இயக்கத்தில் ‘பொம்மலாட்டம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர், அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

அந்த வரிசையில் சூர்யாவுடன் மாற்றான் நடித்தார், விஜய்யுடன் துப்பாக்கி படம் அவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தோடு விஜய்யோடு ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். விஜய்யை தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்தவர் அஜிர் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இப்போது, நடிகை காஜல் அகர்வால் OTT தளத்திற்கான புதிய வலைத் தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. தகவல்களின்படி, இது ‘குவாண்டிகோ' என்ற ஹாலிவுட் தொடரின் ரீமேக் என தெரிகிறது. அசல் தொடரில் உலகளாவிய ஐகான் மற்றும் பேஷன்ஸ்டா பிரியாங்கா சோப்ரா ஜோனாஸ் இடம்பெற்றிருந்தார். மேலும், இந்த வலைத் தொடரை இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி' படத்தில் காணப்பட்ட காஜல், தற்போது, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹே சினாமிகா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com