முகப்புகோலிவுட்

ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய கஜோல்!

  | September 28, 2019 13:25 IST
Kajol

துனுக்குகள்

 • மறைந்த ஸ்ரீதேவியின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது
 • இவறது வாழ்கை வரலாறு புத்தகத்தை சத்யார்த் நாயக் எழுதியுள்ளார்
 • இந்த புத்தகத்திற்கு கஜோல் முன்னுரை எழுதியுள்ளார்
காலம் கடந்தும் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் காலத்தை வென்றவர்களாகிறார்கள் அந்த வரிசையில் காலத்தை வென்ற கலைஞர் ஸ்ரீதேவி. மயிலு என்கிற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி அவர் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவராத ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் . தமிழ்,தெலுங்கு, இந்தி என தான் அடியெடுத்து வைத்த எல்லா இடங்களிலும் வெற்றி கோப்பையை தன் திறமையால் நிரப்பியவர். இவருடைய வாழ்க்கை வரலாறை ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்.  
இந்த புத்தகத்துக்கு இந்தி நடிகை கஜோல் முன்னுரை எழுதியுள்ளார். உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது வரை அழியாத புகழுடன் இருக்கும் ஸ்ரீதேவியின் ஐம்பது ஆண்டு கால பயணத்தை எழுத்தாக கொண்டு வந்திருக்கிறது என்றார். கஜோல் இது குறித்து மேலும் கூறும்போது, “நான் ஸ்ரீதேவியின் படங்களையும், அவரது ஸ்கிரீன் - மேஜிக்கையும் பார்த்து தான் வளர்ந்தேன். எப்போதும் நான் அவரது ரசிகை” என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com