முகப்புகோலிவுட்

கமல் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்!

  | July 16, 2019 12:20 IST
Kamal

துனுக்குகள்

  • சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார்
  • லைகா மற்றும் கமலின் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது
  • நீண்ட இடவெளிக்கு பிறகு கமலுடன் இணைந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அசை அமைக்கவிருக்கிறார்.
 
 
கமல் தற்போது அரசியல் நிகழ்வுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் இயக்குநர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை தொடங்கி படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தேர்தல் வேலைகள் கட்சி வேலைகள் என பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் லைகா நிறுவனமும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘தலைவன் இருக்கின்றான்' .  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அசை அமைக்க உள்ளார். இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரகுமான் “கமலுடன் வேலை செய்யவிருப்பது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த லைகா மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.  
 
இந்த செய்தியை பகிர்ந்துள்ள கமல் “தலைவன் இருக்கின்றான்” படத்தில் இணைந்து எங்களுடைய குழுவிற்கு பலம் சேர்த்தற்கு நன்றி, என்றும் இப்படம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்