முகப்புகோலிவுட்

கமலுடன் முதல் முறையாக நடிக்கவிருக்கும் விவேக்!

  | August 20, 2019 13:25 IST
Indian 2

துனுக்குகள்

 • இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்
 • இப்படத்தின் மூலம் முதல் முறையாக விவேக் கமலுடன் நடிக்கவிருக்கிறார்
 • இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணையவிருக்கிறார் கமல்
Indian 2 Update: தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடி நடிப்பில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர் காமெடி நடிகர் விவேக். இவர் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலக வாழ்க்கையில் நடிகர் கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. இதனை பல்வேறு இடங்களில் நடிகர் விவேக் பதிவு செய்திருக்கிறார். கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு எனவும் தெரிவித்திருந்தார். தற்போது அது நிறைவேற உள்ளது.
         
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் கமல் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார்.
 
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com