முகப்புகோலிவுட்

கமல் ஹாசன்-கௌதம் மேனன் கூட்டணி தொடர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்.?

  | July 16, 2020 16:55 IST
Vettaiyaadu Vilaiyaadu 2

முன்னதாக ‘வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் இருந்தது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘உலக நாயகன்' கமல் ஹாசன் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு'. இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அண்மையில், கமல்ஹாசன் கவுதம் மேனனுடன் இரண்டாவது முறையாக ‘வேட்டையாடு விளையாடு-2' படத்திற்காக இணைவார் என்றும், அப்படத்தை ஐசரி கே கணேசனின் வெல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் என்றும் செய்திகள் வந்தன.

இப்போது, சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், ‘நடிகையர் திலகம்' படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ‘வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ‘பென்குயின்' திரைப்படத்தில் காணப்பட்டார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு நேர்மறையான கருத்துக்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. இப்போது, ரஜினியின் ‘அண்ணாத்த' படத்தில் நடித்துவரும் கீர்த்தி, மேலும் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', மிஸ் இந்தியா, குட் லக் சகி, ரங் தே ஆகிய படங்களையும் வரிசையாக கொண்டுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com