முகப்புகோலிவுட்

“இந்தியன் 2” கமல் எடுத்த அதிரடி முடிவு! விறுவிறுப்பாகும் படப்பிடிப்பு?

  | September 14, 2019 18:05 IST
Indian 2

துனுக்குகள்

 • 23ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார் சங்கர்
 • ஆந்திராவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது
 • அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம். ‘இந்தியன்' இந்த படத்தில் கமல்ஹாசன் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லஞ்சம் வாங்குபவர்களை பழிதீர்க்கும் சுதந்திர போராட்ட வீரராக நடித்து அசத்தியிருந்தார் கமல். மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 23 ஆண்களுக்கு பிறகு இயக்குநர் சங்கரால் இயக்கப்பட்டு வருகிறது. 
 
கமல் இந்த படத்திலும் இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தொடரப்படாமல் இருந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  சமீபத்தில் சென்னையில் செட் அமைத்து நடத்தப்பட்டது.
 
டிவி நிகழ்ச்சி அரசியல் பணிகளுக்கிடையே இந்தியன் 2 படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படப்பிடிப்பு குழுவிற்கு கமல் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளாராம். அது படப்பிடிப்பை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் பட வேலைகள் வேகமாக நடைபெறுகிறதாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com