முகப்புகோலிவுட்

கிரேசி மோகன் நாடகங்கள் தொடரும்; கமல் கொடுத்த நம்பிக்கை?

  | June 26, 2019 17:29 IST
Kamal

துனுக்குகள்

  • கிரேசி மோகன் வசூல்ராஜா எம்,பி.பி.எஸ் படத்தில் நடித்திருந்தார்
  • இவர் சிறந்த நாடகக்கலைஞர் ஆவார்
  • கமல் படங்களுக்கு இவர் வசனம் எழுதியிருக்கிறார்
கமலின் பல்வேறு படங்களில் வசனம் எழுதி நடித்து பிரபலமான கிரேசி மோகன் கடந்த 10ம் தேதி காலமானார். இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் ஓவியம், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், கவிஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர்.
சென்னை நகர சபாக்களின் கூட்டமைப்பும் தமிழ்நாடு நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து கிரேசி மோகனுக்கான நினைவேந்தல் கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார்கள். இதில் கிரேசி மோகனுடன் திரைத்துறை, நாடகத்துறையில் பணிபுரிந்தவர்கள் கலந்துகொண்டு அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்திர் கிரேசி மோகனின் தம்பி மாது பாலாஜி பேசும்போது, ‘அண்ணன் இறந்து ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும். கமல் சார் கால் பண்ணினார். ‘இனி அடுத்து என்ன பண்ணப்போறீங்க?'ன்னு கேட்டார். அதான் தெரியல சார், என்று சொன்னேன்.
 
உடனே அவர், அப்படியெல்லாம் விடக்கூடாது. கிரேசி கிரியே‌ஷன்ஸ் தொடர்ந்து மோகனோட நாடகத்தையெல்லாம் போடணும். இதுமட்டுமல்லாம அவர் எழுதி இன்னும் நாடகமாக்கப்படாமல் இருக்குறதையும் உலகத்துக்கு எடுத்துட்டுப் போகணும். உடனே சபா புக்பண்ணுங்க. அவரோட கிரேசி ப்ரிமியர் லீக்கோட 100வது நாள் ஷோவை நானும் மவுலி சாரும் நடத்திக் கொடுக்குறோம்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார். பின்பு பேசிய நாடகத்துறையை சேர்ந்தவர்கள் கிரேசி மோகனுடனான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்