முகப்புகோலிவுட்

கமல் நடிக்கும் "இந்தியன் 2" படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல்...?

  | May 15, 2019 17:13 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • சங்கர் இப்படத்தை இயக்கவிருக்கிறார்
  • காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்கிறார்
  • கமல் தற்போது அரசியல் வேலையில் தீவிரமாக இருக்கிறார்
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம் 'இந்தியன்'. இப்படம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பழிவாங்கும் ஒரு தேசப்பற்றாளனின் கதையாக அமைந்திருந்தது.
 
ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போத இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சங்கர் கமலை வைத்து எடுக்க திட்டமிட்டு அதற்கான பனிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
 
தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனவும் செய்திகள் வெளியாகவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
 
ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடைத்தேர்தலில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்