முகப்புகோலிவுட்

ஆந்திரா சிறைச்சாலையில் கமல்! 'இந்தியன் 2' அப்டேட்!

  | September 19, 2019 17:09 IST
Indian 2

கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

துனுக்குகள்

  • ஆந்திர மாநிலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
  • இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்
  • கமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
கடந்த 1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன்(kamalhasan) நடித்து வெளியான படம் ‘இந்தியன்'. மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொலை செய்யும் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். இப்படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
 
23ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை(Indian2) பிரம்மாண்டாக இயக்கி வருகிறார் சங்கர். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக  காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், பாபி சிம்ஹா, விவேக், டெல்லி கனேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்