முகப்புகோலிவுட்

“கடாரம் கொண்டான்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து கமல் வாழ்த்து!

  | July 04, 2019 12:12 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • ராஜ் கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது
  • இப்படம் ஜுலை 19ல் வெளியாகிறது
  • இப்படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கி இருக்கிறார்
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், லீலா,அபி இன்னும் பலர் நடித்திருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்'. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கமல், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி பேசினார்,
 
"ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனியை ராஜ்கமல் என்று தான் வைத்தோம். ஆனால் அனந்து தான் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான்  துவங்க்கியுள்ளாம். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப் பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன்.  கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். ஒருபடத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப்பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும். ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்த்தை கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது" என்றார்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்