முகப்புகோலிவுட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘எவனென்று நினைத்தாய்’- உலக நாயகனின் 232வது படம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

  | September 16, 2020 23:16 IST
Rkfi

‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார்.

‘தளபதி' விஜய், ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கங்கராஜின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஆம், எதிர்பார்த்தது போல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் திரைப்படம் உறுதியானது. கமல்ஹாசனின் 232-வது திரைப்படமான இப்படத்துக்கு ‘எவனேன்று நினைத்தாய்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாலை தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மில்லியன் கணக்கான ரசிகர்கள் இந்த அறிவிப்புக்கு காத்திருந்த நிலையில், இன்று மாலை ‘சிவப்பு பின்னணியுடன் துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்ட கமலின் உருவத்துடன் ‘ஒன்ஸ் அபான் எ டைம் தெர் லிவ்டு எ கோஸ்ட்' என்ற தலைப்பில் ஒரு மாஸான போஸ்டருடன் வந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் களைக்கட்டியது. 

மேலும், கமலின் ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' இப்படம் தயாரிக்கப்படுகிறது மற்றும்  இப்படத்துக்கு ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக 2021 கோடைகாலத்தில் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமைய  காத்திருக்கிறது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com