முகப்புகோலிவுட்

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது ஏன்..?

  | May 11, 2019 14:30 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்
  • இந்த படத்தில் காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தை சங்கர் மீண்டும் கமலை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு அதற்கான வேலையை தொடங்கினார்.
 
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.இதனிடையே படம் குறித்து சர்ச்சைகள் சமகவலைதளங்களில் பரவத் தொடங்கியது.
 
இப்படம் கைவிடப்பட்டதாக அவ்வப்போது பேசப்பட்டது. இதற்கு முற்றுபுள்ளி வைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் அதனை மறுத்தது.
 
சில நாட்கள் படப்பிடிப்பை நடத்திய பிறகு கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது.பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்தனர். அதன்பிறகும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டதால் மேலும் தாமதம் ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக மீண்டும் தகவல் பரவியது.
 
இதனை தயாரிப்பாளர் தரப்பில் மறுத்தனர். தேர்தல் முடிந்து பட வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் டத்தப்படும்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளனர்.3 மாதங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தேவர் மகன்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இது குறித்த செய்தியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட வேண்டும் என்று ரசிகர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்