முகப்புகோலிவுட்

வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கதை? எது உண்மை?

  | August 26, 2019 20:01 IST
Indian 2

துனுக்குகள்

  • சங்கர் இந்த படத்தை இயக்குகிறார்
  • இந்த படத்திர் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார்
  • அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது
சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன்  சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் மீண்டும் தொடங்கி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை வெளியாகி விட்டதாக செய்திகள் வெளியாகிவருகிறது.
சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் கதையானத,
 
நடிகர் சித்தார்த் யூடியூப் நடத்தும் சமூக ஆர்வலராக இருக்கிறார். நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வயதான கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார். ஊழல் அரசியல்வாதிகளை தனது பாணியில் தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.
 
சென்னை திரும்பும் கமல்ஹாசன் தனது மனைவியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தார்த்திடம் வாங்குகிறார். பின்னர் வர்ம கலையின் மூலமாக அனைவரையும் அழிக்கிறார். இதற்கு நடிகர் சித்தார்த்தும், வர்மக் கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கின்றனர்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் கமல்ஹாசனைப் பிடிக்க புதிய திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி கமல்ஹாசன் பிடிபட்டாரா? என்பது கிளைமாக்ஸ்.
 
இந்தக் கதை சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் படக்குழு இதுகுறித்த எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்