முகப்புகோலிவுட்

சீனாவின் செயலிகளான ‘Tik-Tok’, ‘Helo’ கணக்குகளை அழித்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..! “நீங்கள்..?”

  | June 18, 2020 23:16 IST
Ghibran

ஜிப்ரான் தற்போது க/பெ. ரணசிங்கம், கசட தபற, மாறா, ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிவருகிறார்.

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. சிலர் சீன தயாரிப்பு டிவிக்கள், மொபைல்களை தெருவில் போட்டு உடைக்கத் தொடங்கியுள்ளனர்.

டிக்டாக் போன்ற  பிரபல சீன ஆப்களை அன் இன்ஸ்டால் பண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சீன தொலைத் தொடர்பு சாதனங்களை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

அதற்கும் மேலாக, உணவகங்கள் சீன உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும், மக்களும் சீன உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பது வரை எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில், பிரபல இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான், சீன இசை பயன்பாடுகளான டிக் டோக் மற்றும் ஹலோவில் தனது கணக்குகளை நீக்கியுள்ளார். டிக் டோக் மற்றும் ஹலோ ஆப்புகளை நீக்குவதன் ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “ நான் அழிக்கிறேன்.. நீங்கள்..?” தனது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் முன்னணியில், கடைசியாக ‘தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு இசையமைத்த ஜிப்ரான், அடுத்ததாக விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம், கசட தபற, மாதவனின் ‘மாறா', ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com