முகப்புகோலிவுட்

'அசுரன்' படக்குழுவினருக்கு உலகநாயகன் வாழ்த்து!

  | October 12, 2019 14:52 IST
Kamal Hasan

நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார்.

கலைபுலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அசுரன்'. மஞ்சுவாரியர், டீ.ஜே.கருணாஸ் மகன் கென், பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதாரா ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையான பஞ்சமி நிலம் மீட்பு குறித்த மிக முக்கிய பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவானது. பல்வேறு பிரபலங்கள் இப்படத்திற்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் 'அசுரன்' திரைப்படத்தை பார்த்தார். அவருடன் அவருடைய மகள் சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர். இதனை தொடர்ந்து, மஞ்சு வாரியரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன், அதன்பின் லண்டனில் இருக்கும் தனுஷூக்கு போன் செய்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.  
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்