முகப்புகோலிவுட்

மோடியையும், நிர்மலா சீதாராமனையும் பாராட்டிய கமல் ஹாசன்..!

  | March 27, 2020 13:08 IST
Kamal Hassan

ஏழை மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆளும் மாநில மற்றும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார், ஆனால் அதே அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் சில திட்டங்களை அறிவிக்கும் போதெல்லாம் பாராட்டவும் செய்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்த போது தனது ட்விட்டர் பக்கத்தில் “உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்” என்று கடுமையாக சாடினார்.

நாடு முழுக்க முடக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவசியமற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்பபட்து. இதன் காரணமாக உருவான நிதி சிக்கல்களைச் சமாளிக்க ஏழை மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரண தொகுப்பினை அறிவித்த நிதியமைச்சர், "யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்" என்று கூறி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் கஷ்டங்களை தணிப்பதில் அரசு உடனடி கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

அந்த அறிவிப்பையடுத்து, நடிகர் கமல் ஹாசன் தனது பழைய ட்வீட்டை இணைத்து தற்போது பிரதமர் மோடியையும், நிதி அமைச்சரையும் பாராட்டிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அன்புக்குரிய நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி. ஏழைகளைச் சென்றடைந்ததற்கு நன்றி. அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சத்தின் வெளிப்பாடாகவே பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். இந்த நெருக்கடியின் போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.
அதையடுத்து மக்கள் பலரும் இந்திய அரசாங்கத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் கமல் ஹாசனின் குரலுக்காகவும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்