முகப்புகோலிவுட்

ரஜினி, விஜய், அஜித், இளையராஜா-னு எல்லோரையும் அழைத்த கமல்..! #JantaCurfew

  | March 21, 2020 09:41 IST
Janta Curfew

அந்த ட்வீட்டில் அவர், நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், இளையராஜா உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இனிமேல்தான் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஞாயிறு முதற்கொண்டு மிக அவசியம் ஏற்பட்டாலன்றி, காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதையடுத்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதில் “#JantaCurfew-க்கான நம் பிரதமரின் அழைப்புக்கு நான் முழு ஒற்று நிற்கிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரிடர் மற்றும் நாம் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்று கூறியுள்ள அவர் “மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எனது ரசிகர்கள், எனது நண்பர்கள் மற்றும் எனது மக்களை ஆதரிக்க வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர், நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, அனிருத், ஜி.வி பிரகாஷ், ஜிப்ரான், தேவி ஶ்ரீ பிரசாத், இளையராஜா உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com