முகப்புகோலிவுட்

வேட்டையாடு விளையாடு 2 ரெடி..? கமல் ஹாசனை சந்தித்த கவுதம் மேனன்.!

  | March 10, 2020 17:01 IST
Vettaiyadu Vilaiyadu 2

2006-ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமல் ஹாசன் மீண்டும் இயக்குநர் சங்கருடன் இணைந்து ‘இந்தியன் 2' திரைப்படத்தி நடித்துவருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அனால், பாப்பிடிப்புத் தளத்த்தில் ஏற்பட்ட எதிர்ப்பாராத விபத்தினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், கமல் ஹாசன் மற்றும் கிளாசிக் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஜீவாவின் ‘ஜிப்ஸி' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது அப்படக்குழுவுடன் கவுதம் மேனனும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பின்போது அவர்கள் கிளாசிக் 'த்ரில்லர் காப்' படமான ‘வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துகான கதையைப் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com