முகப்புகோலிவுட்

கமல் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்.! விரைவில் ‘யசோதா’…

  | May 15, 2020 11:29 IST
Yashoda

நடிகை ஸ்ரீபிரியா இக்குறும்படத்தை, கமீலா நாசர் மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

உலகநாயகன் கமல் ஹாசன் ‘யசோதா' என்ற குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரீபிரியா இக்குறும்படத்தை, கமீலா நாசர் மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

தனது சமூக ஊடக பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல் “யசோதா எனும் குறும்படம், ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் மற்றும் சிவகுமார் ஆகியோர் இணைந்து மொபைலில் படமாக்கப்பட்டுள்ளது. கிருஷ் பி.ஜி.எம் அமைக்க, ரூபன் தொகுத்து, நிருத்யா பிள்ளை பாடியுள்ளார். இது ஒரு சுவாரஸ்யமான முயற்சி. ‘யசோதா”இன் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், “உற்சாகமாக உள்ளது… இன்று படப்பிடிப்பு தொடங்கியது! சுவாரஸ்யமான நடிகர்களுடன், ஒரு முழுமையான மொபைல் செல்ஃபி படம் (சமூக இடைவெளியை பின்பற்றிகொண்டு). விரைவில் உங்கள் பார்வைக்கு எட்டும்!” எனக் கூறியிருந்தார். விரைவில் இந்த குறும்படம் இணையத்தில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com