முகப்புகோலிவுட்

ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்..! மேலும் 2 பிரபலங்கள் வாழ்த்து..!

  | March 25, 2020 08:44 IST
Rajinikanth

மாதவன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீடியோ மூலம் வாழ்த்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் டிஸ்கவரி சேனல் இந்தியாவில் பியர் கிரில்ஸுடன் மிகவும் பிரபலமான சாகச நிகழ்ச்சியான ‘இண்டூ தி வைல்டு' எபிசோடில் பங்கேற்றார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள பண்டிபூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்தது.

முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ள ரஜினிகாந்தின் இந்த சிறப்பான எபிசோட் நேற்று மாலை ஒளிபரப்பப்பட்டது. சுப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, மேலும் சமூக ஊடகங்களில் பிரபலமாகிவருகிறது. ரஜினிகாந்த் துணிச்சலான சாகசங்களை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் பல ஆச்சரியங்களும் இருந்தன.

ரஜினிகாந்தின் சிறந்த நண்பரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் ஒரு வீடியோ மூலம் நிகழ்ச்சியில் தோன்றி ரஜினிகாந்துக்கு “மகிழ்ச்சியான, அற்புதமான சாகசத்துக்கு வாழ்த்துக்கள்” என செய்தி அனுப்பினார். அவரைத் தொடர்ந்து நடிகர்கள் மாதவன் மற்றும் 2.0 படத்தின் வில்லனான பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீடியோ மூலம் வாழ்த்தினர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com