முகப்புகோலிவுட்

ஒரே நேரத்தில் 4 உச்ச நட்சத்திரங்கள் வெளியிடும் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்.!

  | November 07, 2019 10:31 IST
Darbar

துனுக்குகள்

  • ‘தர்பார்’ ரஜினியின் 167-வது படமாகும்.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் 167-வது படமான ‘தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 4 மொழிகளில் இன்று வெளியாகிறது.

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்'.வருகிற பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தில், சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தர்பாரின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டரை, தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமல் ஹாசன் வெளியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் இந்தி போஸ்டரை சல்மான் கானும், மலையாள போஸ்டரை மோஹன் லால் வெளியிடுகின்றனர்.
  இந்நிலையில், படக்குழு  இன்று திடீரென ஒரு சர்ப்ரைஸ் மாற்றத்தை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், தர்பாரின் தெலுங்கு மோஷன் போஸ்டரை மஹேஷ் பாபு வெளியிடுகிறார் என்பது தான். இத்ற்கான அனைத்து அறிவிப்பையும் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னரே தர்பார் பொங்கலை கொண்டாட ஆரம்பித்துவிட்ட ரஜினி ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்