முகப்புகோலிவுட்

கமலுடன் விஜய் சேதுபதி; ‘மருதநாயகம்’ செம அப்டேட்.!!

  | May 03, 2020 18:09 IST
Kamal Hassan

வி.ஜே. அபிஷேக் ராஜாவுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இன்ஸ்டா லைவ் அமர்வில் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார்.

வி.ஜே. அபிஷேக் ராஜாவுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இன்ஸ்டா லைவ் அமர்வில் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார். ‘தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பின் அமர்வில் அரசியல், கலை, சினிமா, ஏக்கம் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி கமல் ஹாசன் பேசினார்.

கமலின் கனவுத் திட்டமான ‘மருதநாயகம்' மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியம் குறித்து அபிஷேக் கேட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, கமல், அது நடக்க முழு கதாபாத்திரமும், ஸ்கிரிப்டும் மறுவேலை செய்யப்பட வேண்டும் என்று கூறினார். "ஸ்கிரிப்ட்டில் நிகழ்வுகள் மாற்றப்பட வேண்டும், இது முதலில் 40 வயதான கதாநாயகனுக்காக எழுதப்பட்டிருந்தது. ஒன்று நான் கால அளவை மாற்றி நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அல்லது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான மற்றொரு நடிகரை நான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், கன்சா / கம்சா என்ற புராண கதாபாத்திரத்தில் ‘சின்ன கன்சா' என்ற தலைப்பில் ஒரு கதையைக் கமல் ஹாசன் எழுதியுள்ளாராம். கன்சா, இந்து புராணங்களில் கடவுள் கிருஷ்ணரின் தாயான தேவகியின் சகோதரர் ஆவார், பெரும்பாலும் ராக்ஷாசா என்று வர்ணிக்கப்படுகிறார்.
கொரோனா பூட்டுதலுக்கு முன், கமல் ஹாசன் சங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன்-2' படப்பிடிப்பிலிருந்தது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com