முகப்புகோலிவுட்

“தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு” கடுப்பான கமல் ஹாசன்..!

  | May 05, 2020 15:19 IST
Kamal Hassan

சமூகவலைதளங்களில் பொது மக்கள் பலரும், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டை பெரிய அளவில் பாதித்து வருவதால், 43,000-க்கும் மேற்பட்ட வழக்குகளாக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் ஒவ்வொரு நாளிலும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள்  எண்ணிக்கையில் எதிர்கொள்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டின் மூலமாகவே கடந்த சில நாட்களில் 90%க்கும் அதிகமான வழக்குகள் ஏற்பட்டுள்ளன. நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 527 வழக்குகள் அதிகரித்துள்ளன. எதிர்பாராத அளவிற்கு இந்த கொடிய வைரஸின் பரவல் பயங்கரமாக பரவிவருகிறது. அதன் காரணமாக தினசை அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், உணவுப் பொருட்களை வாங்க கூட மக்கள் பலரும் அச்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மே 7-ஆம் தேதி முதல் (TASMAC) மதுபானக்கடைகள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை குறைத்து, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், "கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு,  இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு." என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமூகவலைதளங்களில் பொது மக்கள் பலரும், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com