முகப்புகோலிவுட்

கமல் ஹாசனுக்கு இன்று அறுவைச் சிகிச்சை..! என்ன ஆனது அவருக்கு..?

  | November 22, 2019 13:02 IST
Kamal Hasan

துனுக்குகள்

 • 2016-ஆம் ஆண்டில் கமல் ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டது.
 • கமல் ஹாசன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
 • அவரின் காலில் பொறுத்தப்பட்டுள்ள டைட்டேனியம் கம்பி அகற்றப்படுகிறது
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்கு இன்று காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

கடந்த இரு வாரங்களாக ஒவ்வொறு நாளும் கமல் ஹாசனின் பெயர் இடம்பெறாமல் செய்திகள் வருவதில்லை. 65-வது பிறந்தநாள் விழா, அவரின் தந்தை சிலை திறப்பு, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு, 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்' சிறப்பு நிகழ்ச்சி என  தொடர்ந்து பிஸியாக இருந்தார் கமல்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த எதிர்பாராத விபத்தில், கமல் ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதையடுத்து, அவரின் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டிருந்தது. இந்தியன் 2 படம், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி, அரசியல், பாராளுமன்றத் தேர்தல் என மிக கடுமையான ஷெடுலில் இருந்த அவர், காலில் பொறுத்தப்பட்ட கம்பியை அகற்றுவதற்கான சரியான அவகாசம் கிடைகாமல் சிகிச்சை தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
‘உங்கள் நான்' நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ள இந்தநிலையில், அவருக்கு இன்று காலில் கம்பியை அகற்றும் சிகிச்சை நடைபெறவுள்ளது. இந்தச் சிகிச்சை முடிந்து, சில நாட்களுக்கு அவர் முழு நேர ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com